1

About

About
About Us

போயர் சமுதாயம்.

பலவிதமான சாதிகள் தங்கள் இனம் வளர வேண்டும் என ஓராயிரம் யுக்திகளை விழிப்புடன் கையாண்டு இயங்கிக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தின் அவசர அவசரங்களையும் அக்கரைத் தன்மையையும் உற்று பார்க்கும் போது இதே சமுதாய வீதியில் ஒட்ட ராக இருந்து போயர் என்ற சிறப்பு பட்ட பெயருடன் நம்மை நாம் ஆக்கிக் கொண்டு, நாம் சிறப்பாக இயங்காத காரணத்தினால் பிற்பட்டவர்களாகவும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களாகவும், மேலும் மற்ற சமூக அக்கரையாளர்களின் மத்தியில் கடை கோடியில் நாம் தள்ளப் பட்டவர்களாகவும் தாழ்ந்து போனவர்களாகவும் ஆகிவிடக் கூடாது என்கிற சிறப்பு நம்பிக்கையில் " வியாசர் அறக்கட்டளை " என்ற ஒரு சக்கர வியூகத்தை நாம் துவங்கி சிறப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்..

வியாசர் அறக்கட்டளை

இந்த "வியாசர் அறக்கட்டளை" யின் மூலம் நம்மை இந்த ஆட்சியாளர்களுக்கும் மற்றவர்களுக்கும் நாம் யார், எண்ணிக்கையில் நாம் எத்தனை பேர், நம் குலமென்ன, கொள்கையென்ன, நம்மால் என்னென்ன சாதிக்க முடியும், நம்மிடம் உள்ள பலத்தால் நமக்கு கிடைக்க வேண்டிய அரசியல் அங்கீகாரத்தை முழுவதுமாக அடைய நம்மை நாம் முழுமையாக பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.. நம்மால் அனைத்தும் முடியும், நாம் இல்லாமல் அரசியல் வெற்றியை யாரும் எளிதில் அடைந்துவிட முடியாது என்ற நிலையையும் மற்றவர்களுக்கு உணர்த்தியாக வேண்டும். இதன் முக்கிய சாராம்சமாகத்தான் எண்ணிக்கையில் நாம் எத்தனை பேர் என்பதை தெளிவாக நமக்கு நாமே தெளிவாக்கிக் கொண்டால், நாம் திடமான ஒரு சிறப்பு முடிவிற்கு வந்து நம்மை நாம் செம்மைபடுத்திக் கொள்ளலாம் என்கிற பெருத்த நம்பிக்கையில் நம் இன மக்கள் எத்தனை பேர் என்பதை கணக்கெடுத்து ஒரு பலத்தை நாம் நிரூபித்து காட்டியே ஆகவேண்டும் என்கிற கட்டாயத்தில் உள்ளோம்.
About
About
எனவே இந்த "வியாசர் அறக்கட்டளையால்" "போயர் சமுதாயம்" என்ற ஒரு சிறந்த 'பயன்பாட்டுத்தளத்தை' (App) உருவாக்கி நம் சமுதாய சாம்ராஜ்யத்தில் சுழல விட்டிருக்கிறது.. போயர் இன மக்களின் உறவுகளாகிய நாம் இந்த பயன்பாட்டை சிறப்பாக (App) பயன்படுத்திக் கொண்டு, அவரவர்களும் அவரவர்களைச் சார்ந்தவர்களையும் இணைத்து நம் இனத்தைச் சார்ந்தவர்களின் எண்ணிக்கையைத் தெளிவாக்கிக் காட்டிவிட்டாலே நம் பலம் என்ன என்பதை நிரூபித்துவிட முடியும். இந்த பலம் ஒன்று மட்டும்தான் நம் அடுத்தகட்ட ஆயுத்தத்திற்கும் நம் போயர் சமுதாய வளர்ச்சிக்கும் அஸ்திவாரம் ஆகும்.